மத தலைவர்களின் சங்கடத்துக்கும் கைமாறு செய்யும் பலியாடாக றிஷாட்டை மாற்றியுள்ளனர் : மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் கண்டனம் !



மாளிகைக்காடு நிருபர்-
ரசாங்கமும் கர்த்தினல் மல்கம் ரன்ஜித் ஆண்டகை அவர்களும் சங்கடத்துக்குள்ளான நிலமையை மீளச்சரி செய்யவே தலைவர் றிஷாட் பதியுதீன் கைது இடம்பெற்றிருக்கின்றது. ஈஸ்டர் தாக்குதலுக்கு இரண்டு வருடம் பூர்த்தி அன்று கார்த்தினால் நிகழ்த்திய அனுதாப உரையினால் அரசாங்கம் பெரும் சங்கடத்துக்குள்ளாகியது. அன்றைய தினம் அனைத்து ஊடகங்கங்கள் வாயிலாகவும் கர்த்தினால் ஈஸ்டர் தாக்குதலுக்கு மறைமுகமாக அரசாங்கத்தை சாடியதையே பகிர்ந்திருந்தனர். ஈஸ்டர் தாக்குதல் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என்பதை விட ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள, கைப்பற்றிக்கொள்ள ஒரு தரப்பினரால் செய்யப்பட்டதென்றே அவர் தெரிவித்திருந்தார். அதே நாள் சமூக ஊடகங்களிலே பரவலாக காணப்பட்ட பின்னூட்டங்கள் யாவும் “கார்த்தினால் அவர்களே இப்பொழுதா உங்களுக்கு விளங்கியுள்ளது” என பதியப்பட்டிருந்தது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான் தெரிவித்தார்.

அண்மையில் கைதுசெய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சகலரும் கருப்புச்சால்வை அணிந்து தமது எதிர்ப்பை இன்று சபை அமர்வில் வெளிக்காட்டிய பின்னர் சபா மண்டபத்தின் முன்றலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

அரசாங்கம் பெரும் சங்கடத்துக்குள்ளாகிய நாளாகவே அன்றைய தினம் பேசப்பட்டது. பலரது பார்வையில் கர்த்தினாலுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் உள்ள நல்ல உறவு அறுந்து விட்டதாகவே வியாக்கியானம் செய்யப்பட்டது. எனினும் அரசாங்கம் இது தொடர்பில் நிச்சயமாக கர்தினாலை அணுகியிருக்கும் என்பதே பலரது ஊகம். அதனை உண்மை படுத்தும் விதத்திலேயே மறு நாளே கார்த்தினால் செய்தியாளர் மாநாட்டை கூட்டி பல்டி அடித்தார். அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸவுக்கு ஏற்பட்ட நிலைமை கர்தினாலுக்கும் இடம்பெற்றிருக்குமா எனவும் ஊகிக்க வேண்டியுள்ளது.

தான் நேற்று கூறியது தவறுதலாக புரியப்பட்டுள்ளதாகவும் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் தாம் குறிப்பிட்டது உள்நாட்டு அரசியலை அல்ல சர்வதேச அரசியலையே என கத்தோலிக்கர்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் குழம்பினார் கர்த்தினால்.இந்த குழப்பதத்துக்கு காரணம் நேற்றைய அறிக்கையை உடனடியாக திருத்தி கூற அரசாங்கத்திடமிருந்து கார்த்திநாளுக்கு வந்த அழுத்தமா என பலரது சந்தேகங்களை கிளப்பியது.

கார்த்தினால் அவர்களது இரண்டாம் நாள் உரை ஒன்றுக்கொன்று முரணானது என அவரே உணர்ந்தததாலோ என்னவோ மீண்டும் அரசை கொஞ்சம் சாடி சமாளிப்பதற்காகவே மறைமுகமாக றிஷாட்டை இழுத்தார் “ முஸ்லீம் தலைவர்கள் 20க்கு வாக்களிக்காது தமது உறுப்பினர்களை 20க்கு வாக்களிக்க செய்தது எமக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது இது அரசாங்கத்துக்கும் இவர்களுக்குமிடையில் உள்ள டீல் என நாம் நினைக்கின்றோம்” என முடித்துக்கொண்டார். ஈஸ்டர் தாக்குதலுக்கும் 20 வாக்களிப்பில் முஸ்லீம் உறுப்பினர்களின் நடந்துகொண்ட விதத்துக்கும் தொடர்பில்லையாயினும் கார்த்தினால் அவர்கள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை முன்வைத்ததை திசை திருப்பும் பொருளாக முஸ்லீம் தலைவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் டீல் என மாற்றிக்கொண்டர்.

கார்த்தினால் முதல் அரசை விமரிசித்து மறு நாள் அதனை சமாளித்ததற்கான கை மாறாகவே கட்சி தலைவர் ரிஷாட் நடு நிசியில் கைது செய்யப்பட்டார். ரிஷாட் கைதில் அரசாங்க நிகழ்ச்சி நிரல்கள் பல இருந்தாலும் கைதுக்கான நேரடி காரணமாக இதனையே குறிப்பிட வேண்டும். இறுதியில் அரசாங்கத்தின் சங்கடத்துக்கு மாத்திரமன்றி மத தலைவர்களின் சங்கடத்துக்கும் கை மாறு செய்யும் பலியாடாக றிஷாட்டை மாற்றியுள்ளனர்.
சமாதானத்தை வலியுறுத்த வேண்டிய மதபோதகர்கள் இவ்வாறு எந்தவிதமான குற்றச்சாட்டிலும் தொடர்பில்லாத சிறுபான்மைத் தலைவர்கள் தொடர்பில் காட்டமாக அறிக்கைவிட்டு மாட்டிவிடுவது சமாதானத்துக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும் .இவ்வாறு இவர்கள் ஒவ்வொரு அஜெண்டாக்களுக்குமேற்ப சட்டத்தை வளைத்துகொண்டு போவார்களேயானால் ஈஸ்டர் தாக்குதலில் அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும்? எனகேள்வியெழுப்பினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :