மலையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான பரிந்துரைகள் வெகுவிரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் - இ.தொ.கா



க.கிஷாந்தன்-
லையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான பரிந்துரைகள் வெகுவிரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என இ.தொ.கா தெரிவித்துள்ளது.

இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் அப்புத்தளை காகொல்ல பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனை கூறினார்.

தோட்ட கம்பனிகள் மேலதிக கொடுப்பனவை வழங்க ஒப்புக்கொண்டதன் பின்னர் மேலதிக கொழுந்தை பறிப்பதே உசிதம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இ.தொ.கா 1000 ரூபா சம்பள அதிகரிப்பு விடயத்தில் இதயசுத்தியுடன் நடத்திக்கொண்டுள்ளளதை எவரும் மறுக்க கூடாது எனவும் அவர் கூறினார்.

எனினும் காகொல்ல, பொகவத்தலாவ உள்ளிட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு 25 கிலோ தேயிலையை பறிக்க வேண்டும் என தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை நிர்பந்திப்பது வேடிக்கையாகும் எனவும் அவர் கூறினார்.

அந்த பிரச்சினைக்கு அதிகப்பட்சமாக எதிர்வரும் 25 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கு எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இ.தொ.கா எப்போதும் தொழிலாளர் நலன்களை மாத்திரம் முன்னிறுத்தி செயற்பட்டுள்ளது என்றும் அதற்கமையவே 1000 ரூபா சம்பள விடயத்தையும் அணுகியுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஏனையவர்கள் முன்னர் மலையக பெருந்தோட்ட மக்களை கம்பனிகளிடம் அடகு வைத்தாகவும் அவர்களை இ.தொ.காவே மீட்டெடுத்துள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :