இன மத பேதங்களுக்கப்பால் நின்று சேவையாற்றுபவரே பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்.



மன்னார் மறை மாவட்ட ஆயர் மதிப்பிற்குரிய இமானுவேல் பெர்னாண்டோ புகழாரம்.

திமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் விஷேட வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் மன்னார் மறை மாவட்ட ஆயர் மதிப்பிற்குரிய இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக செட்டிகுளம் பெரிய கட்டு அந்தோணியார் ஆலய பகுதியில் சுமார் 8.2 கி.மீ நீளமான காபட் வீதி அமைப்பதற்கான அங்குராப்பண வைபவம் நேற்று 24.4.2021 இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய மன்னார் மறை மாவட்ட ஆயர் தனதுரையில் குறிப்பிட்டதாவது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் இன மத பேதங்களுக்கப்பால் நின்று மனித நேயம் கொண்ட சேவைகளை ஆற்றுபவர், அவரிடம் நல்ல பல குணாம்சங்களை நான் காண்கிறேன் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

வவுனியா செட்டிகுளம் பெரியகட்டு சென்ட் அந்தோனி ஆலய பகுதி மக்களின் வீதிப் பிரச்சினை தொடர்பில் நாம் அவரிடம் விடுத்த வேண்டுகோளை மதிப்பளித்து ஏற்றுக் கொண்டது மாத்திரமன்றி அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக நேற்று சுமார் 189 மில்லியன் ரூபா நிதியொதிக்கீட்டில் 8.2 கி.மீ. வீதிக்கான அங்குராப்பண வைபவம் இடம்பெறுகின்றமை எமக்கு மகிழ்வளிக்கிறது. இன, மத பேதங்களுக்கு அப்பால் மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதில் மும்முரமாக கருசனையுடன் செயற்படக்கூடியவராக காதர் மஸ்தான் அவர்கள் திகழ்வதாக அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன் எமது மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் அபிவிருத்தி பணிகளுக்கெல்லாம் செயல்வடிவம் கொடுத்து துடிப்பான முறையிலே அப்பகுதியில் தேவைப்பாடுகளை உணர்ந்து இன, மத, மொழி, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சேவையாற்றி வருவதையிட்டு தாம் பெரிதும் பெருமிதம் அடைவதாகவும் தனதுரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபை வடமாகாண பணிப்பாளர் திரு. குரூஸ், செட்டிகுள பிரதேச சபை தவிசாளர் திரு. ஜெகதீஸ்வரன், அந்தோணியார் ஆலயத்தின் பங்கு தந்தை மதிப்பிற்குரிய திரு. அருள்நேசன், பறையனாளன் குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ். ராஜபக்க்ஷ, பிரதேச சபை உறுப்பினர்கள், ஆலய பரிபாலன சபையினர், பாராளுமன்ற உறுப்பினர்களின் இணைப்பாளர்கள் , ஊர் மக்கள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :