மீண்டும் உலகம் பூராகவும் அதிலும் குறிப்பாக கொரோனா தொற்று இலங்கையில் விஷ்பரூபம் எடுப்பதாக கூறப்படுவதனால் பிரதேச மக்களுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம். ஜவாஹீர் அவர்களை சந்தித்து இன்று காலை அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் அடங்கிய பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் கலந்துரையாடினர்.
இதன் போது கருத்துதெரிவித்த அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம். ஜவாஹீர், கடந்தகால அனுபவங்களை வைத்து அதனையும்விட சிறப்பான ஒரு சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என தெரிவித்தார். மேலும் தேசிய காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் அமைச்சராக பதவிவகித்த போது உருவாக்கப்பட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு வளப்பற்றாக்குறை காரணமாக ஆரம்பிக்கப்படாமல் இருந்தது வந்தது, இது தொடர்பாக பலமுறை நாங்கள் அவருடன் கலந்துரையாடினோம்.
எதிர்வரும் மே மாத முடிவுக்கு முன்னர் அதனை மக்கள் பாவனைக்கு கொண்டு வருவதாக இதன்போது வாக்குறுதி அளித்தார். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டமைக்காக எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் என அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எஸ்.எம். சபீஸ் சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment