அஹமட் சாஜித் -
பாடசாலை மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்திஅனைத்து மாணவர்களும் சிறந்தபெறுபேறுகளைப் பெற்று எதிர்காலத்தில் சாதணையாளர்களாகவும், திறமைசாலிகளாகவும், நற்பிரஜைகளாகவும் வளர வேண்டும் என்ற எண்ணக் கருவில், மாவடிப்பள்ளியிலுள்ள ஒரே ஒரு பாடசாலையான கமு/ அல் - அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் இந்த ஆண்டுக்கான 1 ம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (09) வெள்ளிக் கிழமை பாடசாலையின் அதிபர் HM. அனீஸ், பிரதி அதிபர் ரஜாப்டீன் ஆகியோரின் தலைமையில் பாடசாலை ஹுசைன் ஞாபகர்த்த மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த ஆண்டுக்கான 1 ம் தவணைப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் 1ம், 2ம், 3ம் இடங்களைப் பெற்ற 66 மாணவர்களைத் தெரிவு செய்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ்வாறான நிகழ்வுகளை நடாத்துவதன் மூலம் ஏனைய மாணவர்களும் அடுத்த தவணையில் நான் இந்த நினைவுச் சின்னத்தையும், பாராட்டுக்களையும் பெற வேண்டுமென்ற மனப் பக்குவத்தோடு போட்டிமனப்பான்மையோடு, கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு எதிர்காலத்தில் சாதணையாளர்களாகவும், திறமைசாலிகளாகவும் வளர ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே இந் நிகழ்வின் கருப்பொருளாகும்.
இந் நிகழ்வுக்கான பரிசில்கள், நினைவுச் சின்னங்களை பாடசாலையின் பழைய மாணவரும், கட்டாரில் தொழில் புரியும் சாலிதீன் முஹம்மட் இஹ்சான் என்பவர் வழங்கி வைத்தார் என்பது சிறப்பம்சமாகும். எனவே இவ்வாறான தனவந்தர்களின் உதவிகளினாலும், ஊக்குவிப்புக்களுமே எமது பாடசாலையின் வளர்சிக்கு முக்கிய காரணமாகு.
எனவே எமது பாடசாலையில் கல்வி கற்ற பலர் எமது பிராந்தியத்திலும், நாடு தழுவிய ரீதியிலும், வெளிநாடுகளிலும் சிறந்த வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், ஆசான்களாகவும், வர்த்தகர்களாகவும், அரச தொழில் வாய்ப்புகளுடனும், முக்கிய பதவியிலும், சமூகம் போற்றும் பதவியிலும் காணப்படுகின்றனர்.

இருந்த போதிலும் தான் கல்வி கற்ப பாடசாலைக்கு இவர்களின் பங்களிப்பு பூச்சியமாகவே உள்ளது. எனவே இவ்வாறானவர்கள் நமது பாடசாலையில் கரிசனை கொண்டு எதிர்காலத்தில் உங்களாலான உதவிகளை செய்து தாய்ப் பாடசாலையின் வளர்சியில் உங்களது பங்களிப்புக்களையும் செய்ய வேண்டுமென்பது பாடசாலைச் சமூகத்தினதும், நலன்விரும்பிகளினதும் அவா என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் வளர்ச்சியில் ஆர்வமுடையோர்கள், கல்விசாரா ஊழியர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் வளர்ச்சியில் ஆர்வமுடையோர்கள், கல்விசாரா ஊழியர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment