கொட்டகலை பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அறிவித்துள்ளது.
அந்த தோட்டத்தில் வசித்த 72 வயதான ஆண் ஒருவர் நேற்று (30) திடிரென உயிரிழந்தார்.
அவ்வாறு உயிரிழந்தவர் தொடர்பில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவில் அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனையடுத்தே மரணித்தவர் வசித்த தொடர் குடியிருப்பு தொகுதியில் உள்ள மேற்குறித்தவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமையில் உள்ளவர்கள் தொடர்பில் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கொவிட் தொற்றால் அண்மையில் உயிரிழந்தமையும் குறிப்பிடதக்கது.
0 comments :
Post a Comment