இந்தியாவுக்கு டுவிட்டர் நிறுவனம் $15 Million நன்கொடை!



எம்.ஜே.எம் பாரிஸ்-
ந்தியாவின் நிலவும் கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு டுவிட்டர் நிறுவனம் இந்தியாவுக்கு $15 Million ( சுமார் 300 கோடி ரூபா ) நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 366,317 புதிய பாதிப்பும், 3,747 உயிரிழப்புகளும் பதிவாயுள்ளன.

இந்தியாவின் நிலைமையை புரிந்து கொண்டு அமெரிக்கா, , ரஷ்யா,UK உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவி புரிந்து வருகின்றன.

இந்நிலையில் $15 Million நிதியுதவியை சமூக வலைத்தள நிறுவனங்களில் முன்னோடியாக விளங்கும் டுவிட்டர் நிறுவனம் இந்தியாவுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டர் CEO ஜக் பேட்ரிக் டோர்சி கூறுகையில்:-
இந்த தொகையானது கேர், எய்ட் இந்தியா மற்றும் சேவா இன்டர்நேஷனல் யுஎஸ்ஏ ஆகிய மூன்று அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.
இதில் கேர்-க்கு $10 Million ( சுமார் 200 கோடி ரூபா ) வழங்கப்பட்டுள்ள நிலையில், எய்ட் இந்தியா மற்றும் சேவா இன்டர்நேஷனல் அமெரிக்கா ஆகியவற்றுக்கு தலா $2.5 Million ( 50 கோடி ரூபா ) வழங்கப்பட்டுள்ளன. சேவா இன்டர்நேஷனல் ஒரு இந்து நம்பிக்கை அடிப்படையிலான, மனிதாபிமான, லாப நோக்கற்ற சேவை அமைப்பாகும். டுவிட்டர் வழங்கிய நிவாரண தொகை மூலம் இந்தியாவின் அரச வைத்தியசாலைகள் மற்றும் கோவிட் -19 பராமரிப்பு மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு ஒக்ஸிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் விநியோகிக்கப்படும் என்று அந் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :