ஜுன் மாத நடுப்பகுதியில் தினமும் 200 மரணங்கள்?



J.f.காமிலா பேகம்-
லங்கையில் எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியிலிருந்து நாளொன்றுக்கு 200 பேர் என்ற எண்ணிக்கையில் கொவிட் மரணங்கள் நிகழக்கூடும் என, சுயாதீன உலக மக்கள் தொகை சுகாதார ஆராய்ச்சி மையம் எனப்படும் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவகத்தின்(IHME) ஆய்வின் ஊடாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் நாட்டில் 56 மரணங்கள் பதிவாகியிருந்தன.
அந்த வகையில் செப்டெம்பர் மாதமாகும் போது, இந்த மரண எண்ணிக்கையானது 20, 000 ஐ அண்மிக்கக் கூடும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது பரவும் கொவிட் அலைகள் மற்றும் முதலாம் அலை என்பன பிற நாடுகளை காட்டிலும் அதிகமாக இருப்பதைக் காட்டி உள்ளது..

இருப்பினும், பொதுமக்கள் கடைப்பிடிக்கும் சுகாதார விதிமுறைகள் மற்றும் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நோய்தடுப்பு நடவடிக்கைகளின் பிரகாரம் இந்த மதிப்பீட்டு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அந்த ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :