30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தலவாக்கலை,சென்கூமஸ் கிராம சேவகர் பிரிவு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது



க.கிஷாந்தன்-
லவாக்கலை, சென்கூமஸ் கிராம சேவகர் பிரிவு இன்று (7.5.2021) முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது - என்று லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அத்துடன், அப்பகுதியில் உள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய ஊழியர்களுக்கும், சென்கூமஸ் தோட்டத் தொழிலாளர்கள் 40 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், சுமார் 30 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தனிமைப்படுத்தல் விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி தோட்டப்பகுதியில் உள்ள நபரொருவருக்கு வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் சிலருக்கு வைரஸ் தொற்று இருந்துள்ளது. இதனையடுத்தே பி.சி.ஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையிலேயே தேயிலை ஆராய்ச்சி நிலைய ஊழியர்களுக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை, இவ்விரு பகுதிகளுக்கும் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :