திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக அங்குள்ள 22கிராமசேவையாளர் பிரிவுகளிலும் கிராமமட்ட கொரோனா விழிப்புணர்வுக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இங்கு இருவகையான கிராம மட்டக்குழுக்கள் அமைக்கப்பட்டு செயற்பட்டுவருகின்றன.
அரசஅறிவுறுத்தலுக்கமைவாக 22கிராமசேவையாளர் பிரிவுகளிலும் தலா 7பேர் கொண்ட 22கொரோனா விழிப்புணர்வுக்குழுக்கள் உருவாக்கப்பட்டு செயற்பட்டுவருகின்றன.
அதேவேளை 22பிரிவுகளிலும் ஆலயதலைவர்கள் அதிபர்கள் சமுகசேவையாளர்கள் என சமுகமட்டதலைவர்கள் 10பேரைக்கொண்டதாக மற்றும் 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 374பேருக்கும் அடையாளஅட்டை வழங்கப்பட்டு வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுவருகின்றது.
கல்முனைப்பிராந்தியத்தில் கோரொனாத் தொற்று தீவிரமாகப்பரவலாம் என எதிர்பார்க்கப்படும் திருக்கோவில்ப்பிரதேசத்தில் 24மணி நேரமும் இயங்கும் கொரோனா அவசர நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிராமிய மட்டக்குழுக்கள் நேரடியாக வொய்ஸ் மெசேஸ் மூலம் இவ் அவசர நிலையத்திற்கு தகவல் வழங்லாம். மேலும் பொதுமக்களும் கொரோனா தொடர்புடைய தகவல்கள் தேவைகள் பிரச்சினைகளை 24மணிநேரமும் அங்கு சமர்ப்பிக்கலாம் என பிரதேச செயலாளர் கஜேந்திரன் கூறுகிறார்.
அங்கு பின்வரும் பிரச்சனைகளை தேவைகள் மக்கள் இக்குழுக்களிடம் முன்வைக்கலாம். மேலும் தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்புகொண்ணலாம் என அவர் மேலும் கூறினார்.
நோயாளியினை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லல் தொடர்பான பிரச்சினை.. தனிமைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகள் அத்தியாவசியப் பொருட்கள் சம்பந்தமான தட்டுப்பாடுகள்இ ஏதும் குறைபாடுகள். உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்வதில் ஏற்படும் பிரச்சினைகள்
வெளி மாவட்டங்களில் தமது கிராமத்திற்குள் புதிதாக வருபவர்களின் தகவல் வழங்குதல் போன்ற விடயங்களிலும் மேலும் ஏதேனும் முக்கிய பிரச்சினை தொடர்பாக தெரியப்படுத்த அல்லது தீர்வினை பெற்றுக்கொள்ள பிரதேச செயலகத்திற்குரிய அவசர அழைப்பு தொலைபேசி இலக்கங்கள் (HOT NUMBERS) அலுவலகம் : 0672265056 பிரதேச செயலாளர் : 0760997674 உதவி பிரதேச செயலாளர் : 0760997690 என்பனவற்றுக்கு தெரியப்படுத்துமாறு அல்லது தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment