கொரோனாவினால் தனிமைப் படுத்தப் பட்டுள்ள றகுமானியா பொது மக்களுக் 5ஆயிரம் ருபா உணவுப் பொதி வழங்குவது சம்மந்தமான கூட்டம்



எம்.ஏ.முகமட்-
கிண்ணியா பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைய கொரோனாவினால் தனிமைப் படுத்தப் பட்ட பொதுமக்களுக்கு 5 ஆயிரம் பெறுமதியான உணவுப் பொதி வழங்குவது சம்மந்தமான கூட்டம் றகுமானியா நகர் கிராம அலுவலகத்தில் இன்று (19) அப் பிரிவு கிராம உத்தியோகத்தர் ஏ.சி.அப்துல் பரீட் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கிராம அபிவிருத்தி சங்கம்,மீனவ சங்கம் மற்றும் விளையாட்டுக் கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட கொரோனா குழு அமைக்கப் பட்டு கண்டம் கண்டமாக உரிய நபர்களுக்கு இப் பொருட்களை வழங்குவதற்கு இக் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.

இக்கூட்டத்தில் கிண்ணியா பிரேதச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோத்தர் எம்.எஸ்.சமீமா,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோத்தர் கே.எம்.உவைஸ்,றகுமானியா கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ஏ.நௌபர். றகுமானியா மீனவ சங்கத்தின் செயலாளர் ரீ.எல் .நளீம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :