கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 98 பேர் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்பு! கல்லூரி அதிபர் யூ.எல்.அமீன்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ம்முறை (2020) நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரில் இருந்து 98 மாணவிகள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பில் உள்ளதாக கல்லூரியின் அதிபர் யூ.எல்.அமீன்; தெரிவித்தார்.

கல்லூரியில் இருந்து இம்முறை உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் மருத்துவத்துறைக்கான வாய்ப்பு 11 பேருக்கும் ஏனைய துறைகளுக்கான வாய்ப்பு 31 பேருக்கும் பௌதீக விஞ்ஞானப்பிரிவில் பொறியியல் துறைக்கான வாய்ப்பு ஒருவருக்கும் ஏனைய துறைகளுக்கான வாய்ப்பு 12 பேருக்கும் தொழிநுட்ப பிரிவில் 06 பேருக்கும் வர்த்தகப் பிரிவில் 03 பேருக்கும் கலைத்துறைப்பிரிவில் சட்டத்துறைக்கான வாய்ப்பு ஒருவருக்கும் ஏனைய துறைகளுக்கான வாய்ப்பு 33 பேருக்கும் என மொத்தமாக 98 பேருக்கு பல்கலைக்கழகம் செல்வதற்கு இம்முறை வாய்ப்பு உள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

மேலும், கணிசமான மாணவிகள் இம்முறை பரீட்சையில் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள மாணவிகள், அதன் பெற்றோர்கள், மற்றும் பகுதித் தலைவர், உதவி பகுதித்தலைவர், பிரதி, உதவி அதிபர்கள், வகுப்பு மற்றும் பாட ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், கல்லூரி அபிவிருத்திக் குழுவினர், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் இதனோடு சம்பந்தப்பட்ட பாடசாலை சமூகத்தவர் அனைவருக்கும் கல்லூரியின் அதிபர் அமீன்; நன்றிகளைத் தெரிவித்ததோடு, சிறப்பாகக் கற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை தேடிக் கொடுத்த மாணவிகள் அனைவருக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :