அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுத்தினம் - “பிரஜா விருட்சம்” மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு



க.கிஷாந்தன்-
மரர். ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுத்தினம் இன்று (26.05.2021) கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இ.தொ.கவின் பொதுச் செயலளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.

நிகழ்வில் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக சி.எல்.எப் காரியாலயத்தில் உள்ள அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் இதன்போது அமரர். ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக பிராஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டில் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு “பிரஜா விருட்சம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது.

முதற் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட இ.தொ.காவின் இளைஞர் அணியின் தலைவர் ராஜமணி பிரசாத், செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ் மற்றும் சில முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்த வருடத்திற்குள் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு எதிர்வரும் நாட்களில் மலையகத்தின் பல பகுதிகளிலும் இடம்பெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :