சட்டமா அதிபரின் கூற்று- விசாரணை அறிக்கை கேட்ட அமைச்சர் சரத் வீரசேகர



J.f.காமிலா பேகம்-
யிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணை அறிக்கைகள், முழுமையற்றவை என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில், 42 பேர் மீதான சாட்சியங்களை எழுத்துபூர்வமாக உறுதிப்படுத்துமாறும், ஐந்து சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகள் முழுமையற்றவை எனவும் சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.

இதன்படி, இது தொடர்பில், சட்டமா அதிபர் தப்புல டி லிவேரவினால் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு நேற்று கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, தமது பதவிக்காலம் நிறைவடைய முன்னர், குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது என சட்டமா அதிபர் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து, தான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் அறிக்கை கோரியதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :