நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு புதிய பி.சி.ஆர் இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது



தலவாக்கலை பி.கேதீஸ்-
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு புதிய பி.சி.ஆர் இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.கொழும்பில் இடம்பெற்ற கட்சி தலைவர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைய சுகாதார அமைச்சு நுவரெலியா மாவட்ட மக்களின் நலன் கருதி புதிய பி.சி.ஆர் இயந்திரம் ஒன்றை வழங்கியுள்ளது.

கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் காணப்பட்ட பி.சி.ஆர் பரிசோதணை இயந்திரம் செயலிழந்த நிலையில் இம்மாவட்ட மக்களுக்கு கொரோனா பரிசோதனைகளை உரிய முறையில் முன்னெடுக்க இயலாத நிலை ஏற்பட்டது.இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு 19.5.2021 புதிய பி.சி.ஆர் இயந்திரம் கிடைக்கப்பட்டுள்ளது.
இதனூடாக நுவரெலியா மாவட்டத்தில் தங்கு தடையின்றி கொரோனா பிசிஆர் பரிசோதணைகளை முன்னெடுத்து அறிக்கைகளை விரைவாக பெற்றுக்கொள்ள முடியும்.இதனூடாக எமது மக்களுக்கான சுகாதார சேவைக்கு வழிவகுத்த அரசுக்கும் சுகாதார அமைச்சுக்கும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :