நிந்தவூரில் கொரோனோவை கட்டுப்படுத்த சுகாதார, நிர்வாக, பாதுகாப்பு தரப்பினர் ஒன்றிணைந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் !



நூருல் ஹுதா உமர்-
நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் பிரதேச மட்ட ஆலோசனை குழுக்கூட்டம் (28) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பாறூசா நக்பர் தலைமையில் இடம்பெற்றது.

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஷ்ரப் தாஹிர், நிந்தவூர் பிரதேச செயலாளர் டீ.எம்.எம். அன்சார், நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர், கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.எம். ஐயரத்ன, நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சஹீலா இஸ்ஸதீன், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சமூக மட்ட பிரதிநிதிகள், பள்ளி வாசல்களின் பிரதிநிதிகள், விசேட செயலனி உறுப்பினர்கள், காரைதீவு இராணுவ படை உயரதிகாரிகள், உட்பட பலரும் கலந்துகொண்டிருந்த இந்த கூட்டத்தில் தீர்மானங்களாக

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இறுக்கமான பிரயாணத்தடையினை நடைமுறைப்படுத்தல், சகல வர்த்தக நிலையங்கள் (பார்மசி தவிர்ந்த) மற்றும் உணவகங்கள் மூடப்படுவதுடன் பேக்கரி உற்பத்தி பொருட்கள், அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மாத்திரம் நடமாடும் விற்பனை மூலம் விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்படுதல், நடமாடும் விற்பனை மூலம் விற்பனை செய்பவர்களுக்கான அனுமதியானது பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் தீர்மானத்துடன் அனுமதிக்கப்பட்டு உரிய அனுமதி பத்திரமானது பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் தமக்குத் தேவையான உணவினை தாமே தயாரித்து சாப்பிடுமாறு வேண்டப்படுவதுடன் மிக அத்தியாவசியமான தேவை இன்றி வெளி நடமாட்டத்தினை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

மேலும் பொது மக்களை மேலும் வலுவூட்டும் விழிப்புணர்வு செயற்திட்டமானது கிராம சேவகர் பிரிவுதோறும் கிராமிய மட்டக் குழுக்கள் மூலமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். எனவே பொது மக்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து தங்களையும் எமது பிரதேசத்தையும் பாதுகாத்துக் கொள்ள மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் மக்களை கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :