ஹமாஸ் – இஸ்ரேல் போரானது ஈரான், அமெரிக்க பலப்பரீட்சையா ?



ரான் அணு ஆயுதம் தயாரிப்பதில் ஈடுபடுகின்றது என்று இஸ்ரேல் வழங்கிய தகவல்கள் காரணமாக ஈரானுடன் செய்துகொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து 2018 இல் விலகியதுடன் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பொருளாதார தடையும் விதித்தது.

அதன்பின்பு வளைகுடா பிராந்தியத்தில் அடிக்கடி போர் பதட்டம் ஏற்படுவதுடன் எந்த நேரத்திலும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் போர் மூளலாம் என்ற சூழ்நிலை காணப்பட்டது.

கடந்த வருடம் ஈரானின் தளபதி ஹாசீம் சுலைமானி அவர்கள் ஈராக் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது அமெரிக்காவினால் கொல்லப்பட்டார். அதற்கு பழிவாங்கும் விதத்தில் ஈராக்கில் இருந்த அமெரிக்க தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடாத்தி அழித்தது.

இவ்வாறு அடிக்கடி பதட்டநிலை ஏற்படுகின்ற நிலையில், பாலஸ்தீனில் ஹமாஸ் இயக்கத்துக்கும் இஸ்ரேலுக்கும் பதினொரு நாட்கள் போர் நடைபெற்றது. இந்த போரானது காஸா, இஸ்ரேல் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றாலும், இதில் இரு தரப்பிலும் பாவிக்கப்பட்டது அமெரிக்காவினதும் ஈரானினதும் ஆயுத தளபாடங்களாகும்.

அதாவது இந்த போர் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஓர் பலப்பரீட்சையாகவே அவதானிக்க முடிகின்றது.

அமெரிக்காவின் F35 விமானமானது உலகிலேயே அதி நவீன போர் விமானமாகும். இது ராடர்களில் தென்படாது. அத்துடன் இதனை எந்தவொரு ஏவுகணை மூலமும் தாக்கி அழிக்க முடியாது. ரஷ்யாவின் S400 வான்பாதுகாப்பு சாதனத்தினால் F35 விமானத்தை வீழ்த்தமுடியும் என்று கூறப்பட்டாலும், அது ஈரானிடம் இல்லை.

F35 விமானங்கள் இஸ்ரேலிடம் ஏராளமாக உள்ளது. இந்த விமானங்களின் மூலமாகவே காஸாமீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியது.

அதுபோல் ஹமாஸ் இயக்கத்தின் ஏவுகணைகளை தடுத்து வீழ்த்திய “அயன் டோம்” என்னும் வான்பாதுகாப்பு சாதனம், சுரங்கங்களை அழிப்பதற்காக பாவித்த “பங்கர் பஸ்டர்” குண்டுகள் உட்பட இஸ்ரேல் பாவித்த அனைத்து நவீன ஆயுதங்களும் அமெரிக்க தயாரிப்பாகும்.

அதேநேரம் ஹமாஸ் இயக்கத்தினர் பாவித்த சில ஏவுகணைகள் ஈரானிய தொழில் நுட்பத்தில் ஹமாஸ் இயக்கத்தினால் தயாரிக்கப் பட்டவைகள், இன்னும் சில ஏவுகணைகள் ஈரானிலிருந்து அதன் துணை இயக்கங்கள் மூலமாக காஸாவுக்குள் கொண்டுவரப்பட்டவைகளாகும்.

இஸ்ரேலின் கண்காணிப்பினை தாண்டி காஸாவுக்குள் ஆயுதங்களை கொண்டுவருவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளை ஹமாஸ் இயக்கத்துக்கு ஈரான் அமைத்துக் கொடுத்துள்ளது.

ஆனாலும் அமெரிக்காவின் முழு நவீன ஆயுதங்களையும் இஸ்ரேல் பாவித்தது போன்று ஈரானின் அனைத்து ஆயுதங்களும் ஹமாஸிடம் இல்லை. அத்துடன் வான்பாதுகாப்பு சாதனங்களோ, விமானப்படைகளோ ஹமாஸிடம் இல்லை.

எனவே இந்த போரானது ஹமாஸ், இஸ்ரேல் ஆகியோர்களுக்கிடையிலான போராக மட்டும் பார்க்க முடியாது. மாறாக அமெரிக்கா, ஈரான் ஆகிய பரம எதிரிகளுக்கிடையிலான பலப்பரீட்சையாகவும். இதில் அமெரிக்காவினால் வெற்றிபெற முடியவில்லை என்பதுதான் போரின் முடிவு தெரிவிக்கின்றது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :