அமரர் ஆறுமுகன் தொண்டமான் பற்றிய கவிதை தொகுப்பு



ஆலமரத்தின் விழுது!
கடவுளே ஏன்.....?
எமனுக்கு கட்டளை இட்டாயோ...?
எங்கள் கருப்பு வர்க்கத்தின் தலைவனைக் கொன்றுவரச்சொல்லி

மலை நாட்டின் மாபெரும் ஏவுகணை..! எவ்வாறான தடைகள் வந்தாலும்
தடம் மாற்றும் மாபெரும் தலைவன்

இன்னல்கள் வந்தாலும் இடிந்துப்போக மாட்டார்
நிமிர்ந்து நின்று எதிர்கொண்டு வெற்றியாக மாற்றியமைக்கும் எங்கள் வெற்றி தலைவன்...

வீர நடை...
கம்பீரமான பேச்சு..
அன்பின் அரவணைப்பு...
சிலிமிச்ச நகைச்சுவைப் பேச்சு... சிந்திக்கவைக்கும் செயல்கள்....

'கை உயர்த்தினால்
கதிகலங்கும் கூட்டம்'
சிறந்த முகாமைத்துவம்
தேடி வருபவரை
அரவணைக்கும் ஆற்றல்

ஐயா...!
இதுவரை....
நான் பார்த்த மனிதர்களில்
நீங்கள் மாமேதை
எங்களின் வழிகாட்டி
என்னையும் உருவாக்கிய சிற்பி

மலையக மாற்றத்திற்காக
நம் மக்களோடு மக்களாய் நின்று போராடிய போராளி..!
உங்களை கண்டு வியர்ந்தவர்களில் நானும் ஒருவன்...!

ஜனநாயக ஆட்சியில்
தனித்துவ இடத்தைப் பெற்றீர்
பல கோட்பாடுகளை...
பல இலட்சியங்களை...
பல சட்டங்களை....
பல திட்டங்களை....
விதை விதைத்து...
'மலையகத்தில் ஆலமரமானீர்'
இன்றும் எம்முடன்
ஆணிவேராக இருக்கிறீர்கள்
உங்கள் விழுதுகளாக
நாங்கள் முலைத்திருக்கிறோம்...

நீங்கள் கண்ட கனவுகள்
நனவாகும் வரை...
கை கோர்த்து போராடுவோம் ஆறுபடை முருகனோடு சேர்ந்து எங்களுக்கு பக்கத்துணையாக
அருள் தாருங்கள் ஐயா...

'மண்ணில் விழ்ந்தாலும் தொண்டமானின் தொண்டனாய் முலைத்துக்கொண்டே இருப்போம் விடியலை நோக்கி...'

'உங்களுடைய ஆத்மா
எப்போதும் எங்களோடு
உறவாடி கொண்டிருக்கும் தொண்டமான் என்ற சக்தியாய்'

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

மலையகத்தின் உச்சியிலே
சேவல் கூவினால்
உங்கள் பெயர் சொல்லும்....
சூரியனும் உதிக்கும்....

என்றும் அன்புடன்
உங்கள் விழுது
பெருமாள் கோபிநாத்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :