வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று திங்கட்கிழமை நாற்பத்தி மூன்;று (43) பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதில் மூன்று பொலிஸார் எனவும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேச சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் கொரோனா தொற்றாளருடன் நெருங்கியவர்கள் என நாற்பத்தி மூன்;று (43) பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும், நாற்பது (40) நபர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளும் இடம்பெற்றதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
நாற்பத்தி மூன்;று (43) பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதில் மூன்று வாழைச்சேனை பொலிஸார் என்பதுடன், ஞாயிற்றுக்கிழமை இரண்டு பொலிஸார் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அன்டிஜன் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment