சட்ட மா அதிபராக சஞ்சய் ராஜரத்தினத்தை நியமிக்க பாராளுமன்ற பேரவை அங்கீகாரம்!



ட்டமா அதிபராக சஞ்ஜய் இராஜரத்னத்தை நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் நேற்று (20) நடைபெற்ற பாராளுமன்ற பேரவைக் கூட்டத்திலேயே இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது..

நாட்டின் அடுத்த சட்டமா அதிபராக பதில் சொலிசிற்றர் ஜெனரலான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்னத்தை நியமிப்பதற்கு ஜனதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்திருப்பதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் உறுப்பினராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்த்தனவை மீண்டும் நியமிக்க பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்திருக்கிறது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு ஜயந்த சாந்த குமார விக்ரமரத்னவை நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவை உடன்பாடு தெரிவித்ததாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :