கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தீவிரமடையும் கொவிட்!



J.f.காமிலா பேகம்-
பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை – பிலிங்கிபொனி பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் கடந்த 29 ஆம் திகதி 180 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பி.சி.ஆர் பரிசோதனையின் இரண்டாம் தொகுதி அறிக்கை நேற்று மாலை கிடைக்கப்பெற்ற நிலையில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் தற்போது முடக்கப்பட்டுள்ள இன்ஜஸ்ட்ரி கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர பொகவந்தலாவை நகரிலுள்ள சிகையலங்கார நிலைய ஊழியர் ஒருவருக்கும், சாஞ்சிமலை மேல் பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும், நோர்வூட் சென்ஜோன் -டிலரி சிறுவர் நிலைய பராமரிப்பாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இன்ஜஸ்ட்ரி கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போடைஸ் தோட்டம் ஆகியன முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 30 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் 190 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 143 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்திய பொறுப்பதிகாரி குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய நாளில் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலேயே அதிக அளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 531 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கெஸ்பேவையில் 149 பேரும், பிலியந்தலையில் 59 பேரும், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 85 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் 542 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொம்பே பகுதியில் 113 பேரும், கிரிந்திவெலயில் 101 பேரும், பூகொடையில் 80 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் 116 பேரும், காலி மாவட்டத்தில் 112 பேரும், கண்டி மாவட்டத்தில் 85 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 74 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 69 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 46 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 39 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் 101 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 10 ஆயிரத்து 14 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அரசாங்கத்தின் 42 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5 ஆயிரத்து 383 பேரும், 59 தனியார் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 4 ஆயிரத்து 631 பேரும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 13 மாவட்டங்களுக்குட்பட்ட 88 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், இரண்டு மாவட்டங்களுக்குட்பட்ட 6 பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :