லட்சத்தீவு மக்களின் கலாச்சாரம், சிவில் உரிமைகளை பாதுகாக்க பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு !



புதுதில்லி : லட்சத்தீவு மக்களின் கலாச்சார அடையாளத்திற்கும், சிவில் உரிமைகளுக்கும் எதிரான நகர்வுகள் நிறுத்தப்பட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் அம்மக்களின் மத, கலாச்சார மற்றும் மொழியியல் அடையாளத்திற்கும், பழங்குடி மக்களின் சிவில் உரிமைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்க்க நாட்டின் ஜனநாயக சக்திகள் முன் வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் அகில இந்திய தலைவர் ஓ.எம்.ஏ ஸலாம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

யூனியன் பிரதேசத்தின் நிர்வாகிகள் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருக்க வேண்டிய தற்போதைய விதிமுறையை மீறி, யூனியன் பிரதேசத்தின் புதிய மத்திய நிர்வாகியாக பாஜக தலைவரும், மோடியின் நெருங்கிய கூட்டாளியுமான பிரபுல் படேலின் நியமனம் என்பது மோசமான நோக்கங்களுடன் கூடிய ஒரு அரசியல் முடிவாகும். மோடியின் நிர்வாகத்தின் கீழ் முன்னெப்போதும் இல்லாத இத்தகைய சர்வாதிகார நடவடிக்கைகள் தீவுவாசிகளின் அன்றாட வாழ்க்கையில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர்களின் தனித்துவமான கலாச்சாரத்தையும் பழக்கவழக்கங்களையும் அழிக்கக்கூடும் என பாப்புலர் ஃப்ரண்ட் கருதுகிறது.

ஏறக்குறைய ஒரு வருடமாக கோவிட் இல்லா பகுதியாகவே இருந்த தீவுப்பகுதியில் பிரபுல் படேலால் திருத்தப்பட்ட கோவிட் நெறிமுறை, தொற்றுநோய் வேகமாக பரவ வழிவகுத்துள்ளது. திருத்தப்பட்ட நெறிமுறையை எதிர்த்து போராட முன்வந்தவர்கள் கடுமையான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாட்டிறைச்சி தடை, பள்ளி மதிய உணவு அட்டவனையிலிருந்து மாட்டிறைச்சி நீக்கம், லட்சத்தீவு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் வளர்ச்சி என்ற பெயரில் எந்தவொரு நிலத்தையும் கையகப்படுத்த அரசாங்கத்திற்கு கட்டுப்பாடற்ற அதிகாரம், பெரும்பான்மையான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல். நூற்றுக்கணக்கான தற்காலிக தொழிலாளர்கள் சுற்றுலா மற்றும் பிற அரசு துறைகளில் இருந்து வெளியேற்றம், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்களை உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் போட்டியிடவிடாமல் தடை செய்தல் உள்ளிட்ட கொடூர சட்ட நடைமுறைகளை கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகிறது.

லட்சத்தீவு என்பது நமது விடுமுறை நாட்களில் வெப்பமண்டலத்திலிருந்து தப்பிக்க தேடும் சுற்றுத்தலம் என்பதை விட முக்கியமானது. அனைத்து இந்திய குடிமக்களையும் போன்று சம உரிமை கொண்ட, பழங்குடியினர் என்ற சிறப்பு உரிமையை கூடுதலாக கொண்ட மக்களின் வாழ்விடம் ஆகும். அவர்கள் தங்கள் சொந்த மத, கலாச்சார மற்றும் மொழியியல் அடையாளத்தைக் கொண்டுள்ளனர். எனவே அவர்களின் சிவில் உரிமைகளை பறிக்கவும், அவர்களின் தனித்துவமான அடையாளத்திற்கு ஆபத்து விளைவிக்கும் மத்திய அரசின் இந்துத்துவ அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்க்கவும், கண்டிக்கவும் நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :