மலையக மக்களை “மலைவாழ் மக்களாக” கருதாமல் மலையக தமிழ் மக்களாகக் கருதி மதிப்பளிக்க வேண்டும்-ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் பிரதி நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன்



மிழகத் தலைவர்கள் இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்களை இந்தியாவிலுள்ள “மலைவாழ் மக்களாகவே” கருதி வருகின்றார்கள். புதிய முதல்வராக பதவியேற்கும் மு.க. ஸ்டாலின் காலத்திலாவது மலையகத் தமிழ் மக்களாக மதிக்கப்பட்டு தொப்புள்கொடி உறவு பலப்படுத்தப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்,

இலங்கையில் குறிப்பாக மலையகத்தில் தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ்த் திரைப்படங்களின் தாக்கம் தொன்று தொட்டு இயல்பாகவே ஈர்க்கப்பட்டு வந்துள்ளது. பெரியார், அறிஞர் அண்ணா முதலானோரின் பகுத்தறிவுக் கருத்துகளோடு, கலைஞரின் திரைப்பட வசனங்களில் பெரிதும் கவரப்பட்ட சந்ததிகளின் வழிவந்த மக்கள் இன்றும் தமிழக அரசியல் நிலைமைகளை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வருகின்றார்கள்.

இருந்தும் தமிழக அரசியல் தலைவர்கள் இங்குள்ள மலையக மக்களை இந்தியாவில் உள்ள மலைவாழ் மக்களாகவே நினைத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் வருகின்றார்கள். அந்த நிலைமை புதிய முதல்வர் மு.க. ஸ்டாலின் காலத்தில் நீங்கி மலையக மக்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அவரின் செயற்பாடுகள் அமைய வேண்டும். மலையக மக்களுக்கு சுபிட்சம் கிடைக்கும் வகையில் தமிழகத்துக்கும் மலையகதுக்குமான தொப்புள்கொடி உறவு மேன்மையடைய வேண்டும்.

இந்திய மத்திய அரசாங்கம் மலையக மக்கள் மீது காட்டியுள்ள அக்கறை தமிழக அரசியல்வாதிகளால் இதுவரை காலமும் காட்டப்படவில்லை. பாரதப் பிரதமர் மோடி தமது காலத்தில் மலையகத்துக்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டு 10 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதேபோல், எதிர்காலத்தில் தமிழக முதல்வரின் பார்வை மலையகத்தின் மீதும் படர வேண்டும்.

ஜனநாயகம், தமிழ் உணர்வு, மொழியுரிமை போன்றவற்றின் ஊடாக தமிழகத்தில் முதல்வராக தெரிவாகி உலகத தமிழர்களின் ஒட்டு மொத்தக் குரலாக ஒலிக்கக் கூடிய அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதில் மலையகத் தமிழ் மக்குளும் உள்வாங்கப்படும் வகையில் தமிழக முதல்வரின் சொல்லும் செயலும் அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :