கிழக்கில் கொவிட் சிகிச்சைக்காக முதலாவது ஆயுர்வேத - அலோபதி சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!



நேற்றைய தினமே 50 பெண் கொரோனா தொற்றாளர்கள் உட்பட சிறுவர்களும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.

பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆயுர்வேத மற்றும் அலோபதி சிகிச்சை முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் ஒன்று திருகோணமலை கப்பல்துறை தள ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் நேற்று மாலை (28) திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் அறிவுறுத்தலுக்கமைய
கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.ஸ்ரீதரனின் வழிகாட்டலின் கீழ் கப்பல்துறை தள ஆயுர்வேத சித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.நிரஞ்சனின் மேற்பார்வையில் குறித்த வைத்தியசாலையின் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

50 படுக்கைகளுடன் கூடிய இந்த சிகிச்சை நிலையத்தில் நேற்றைய தினமே 50 பெண் கொரோனா தொற்றாளர்கள் உட்பட சிறுவர்களும் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுர்வேத மற்றும் அலோபதி முறைமையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றதாகவும்
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.நிரஞ்சன் இன்று (29) தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :