கட்சியின் தீர்மானத்தை மீறியவர்களுக்கெதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது:-பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்!



கில இலங்கை கட்சியின் தீர்மானமானத்தை வரவேற்பதுடன், கட்சியின் கட்டமைப்பு மற்றும் தீர்மானங்களை மதிக்காதவர்களுக்கு எதிராக நடவடிக்யெடுத்தமையானது சிறந்த முண்ணுதாரமாகும் எனவும்,
கட்சியின் வளர்ச்சியில் தலைத்துவத்துடனும் கட்சியின் உயர்பீடத்துடனும் என்றும் துணையாக இருப்பதாகவும் கட்சியின் செயற்பாடுகளை புத்தளத்தில் முன்கொண்டு செல்வதில் பின்நிற்கப்போவதில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் தெரிவித்தார்.

இன்று (23) இடம்பெற்ற ஊடகச்சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

துறைமுக நகர் சட்டத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு முன்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர்பீடம் ஒன்று கூடி சாதக பாதகங்களை தீர்க்கமாக ஆராய்ந்து எதிர்த்து வாக்களிப்பதாக ஏகமனதாக முடிவெடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தனர்.

கட்சியின் தீர்மானத்தை ஏற்று குறித்த சட்ட மூலத்திற்கு கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஆகியோர் எதிராக வாக்களித்த நிலையில்,
கட்சியின் தீர்மானத்தை ஏற்காது, ஆதரவாக கட்சியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தமையானது, கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் பாரிய வறுத்ததை ஏற்பத்தியிருந்தது.

கட்சியின் தலைவருக்கு இன்றைய அரசாங்கம் ஏற்பதுத்துகின்ற கெடுபிடிகள், எவ்வித குற்றச்சாட்டுக்களுமற்ற நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையால் மிகவும் வேதனைக்குள்ளாகியுள்ள கட்சியின் ஆதரவாளர்களுக்கு குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் மிக்க வருத்ததை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநீக்குவதாக கட்சியினால் இன்று தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டமையானது,

சுயநல அரசியலுக்காக கட்சியையும், கட்சியின் அங்கத்தவர்களையும், ஆதரவாளர்களையும் பயன்படுத்தும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அதே நேரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடத்தின் குறித்த செயற்பாடு பிற கட்சிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அதே நேரம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை பிரயோகித்து இன்றைய அரசாங்கம் தமது கட்சியின் தலைமைத்துவத்தை தடுத்து வைத்திருப்பது தொடர்பாகவும், இன்னும் நீதிமன்றத்திற்கு முன் கொண்டுவராமை குறித்தும் கட்சியின் உயர்பீடம் ஆக்கப்பூர்வமாக சட்டரீதியாக செயற்படும் என தான் நம்புவதாகவும்,மேலும் தலைவரின் விடுதலைக்காக பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :