உச்சி வெய்யிலிலே-கவிதை





உச்சி வகிர்ந்தெடுத்து
+++++
Moahmed Nizous


உச்சி வெயில் அலைந்து
உடல் வருத்தி வந்த காசில்
பச்சைப் பிள்ளை பசி நீங்க
பாலும் சோறும் கொடுப்பாக
'மே'யில பயணத் தடை- இப்ப காசு இல்ல கண்ணாத்தா


அண்டாவில அடியில ரெண்டு மூணு சுண்டரிசி
சுண்டலோட சோறு திண்டார் முதல் நாளில்
அண்டை வீடு அங்க இங்க கடன் வாங்கி
ரெண்டு மூணு நாளக் கொஞ்சம் சமாளிப்பார்


கடன் தரும் ஆட்கள் கூட கஷ்டத்தில மாட்டி நிற்க
படும் பாட்டை பாட்டெழுதி பாடேலா
கொஞ்சம் போல குழந்தைக்கு ஊட்டி விட்டு
எஞ்சியோர்கள் இருக்கின்றார் பசியிலே


இடையில கொஞ்ச நேரம் பயணத் தடை நீக்கினாலும்
கடையில பொருள் வாங்க காசில்ல
தடையால வருமானம் தடையாச்சி
விடையில்லா கேள்வியாச்சி சிலர் வாழ்க்கை


அரசு கூட கோபம் வரும் அரிசி கூட தரல்ல என்று
புருசன் கூட சண்ட வரும் சில வீட்டில்
பெரிசாக வசதியுள்ளோர் பக்கத்தில
அரிசாலும் கொடுத்திடுங்க அள்ளாஹ்வுக்காய்


நிதிகள் சேகரித்து பொதுவாகக் கொடுப்பதற்கு
நிலைமைகள் நல்லா இல்ல கொவிட்டால
அதனாலே ஆங்காங்கு இருப்பவர்கள்
எதுவேனும் கொடுத்திடுங்க இரக்கமாக


இறைவனிடம் கையேந்து இருக்கும் நிலை மாறிவிட
இல்லையென்று சொல்லாதவன் அள்ளாஹ்வே
வறியவர் நிலை கண்டு உதவிட
வாழ்க்கையிலே ஆண்டவன் அருள் செய்வான்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :