கடல் கடந்த மனித நேயம். கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்த முஸ்லீம்கள்



மலேசியா : திருநெல்வேலி மாவட்டம் புளியரையை சேர்ந்த இம்மானுவேல் மகன் ஜான்சன் என்பவர் மலேசியாவில் தொழிலாளியாக பணி புரிந்து வந்துள்ளார். கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து முடங்கிய நிலையில் தாயகம் திரும்ப முடியாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 26 ஏப்ரல் அன்று மலேசியாவில் மரணம் அடைந்துள்ளார். இச்செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய், மனைவி உள்ளிட்ட உறவினர்கள் எஸ்.டி.பி.ஐ கட்சியை தொடர்பு கொண்டு அவரை மலேசியாவில் அடக்கம் செய்ய உதவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

அதனடிப்படையில் தமிழகத்தை சார்ந்த எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மலேசியாவில் செயல்படும் ஐ.எம்.ஐ.எம் (IMIM) அமைப்பின் தலைவர் சபருதீன் மற்றும் அன்சர் அலி ஆகியோரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். ஐ.எம்.ஐ.எம் (IMIM) அமைப்பின் முயற்சியால் ஜான்சன் உடல் கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார். இச்செய்தி அறிந்த ஜான்சன் குடும்பத்தினர் எஸ்.டிபி.ஐ கட்சியினருக்கும், ஐ.எம்.ஐ.எம் அமைப்பினருக்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :