கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு; பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு !



சென்னை : கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து வாடுகின்ற குழந்தைகளின் எதிர்கால அச்சத்தை போக்கும் வகையில் தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தமிழக தலைவர் முஹம்மது சேக் அன்சாரி வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகளை வழங்கிட மாவட்ட அளவில் மாவட்ட சிறப்புப் பணிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது.

மேலும் பெற்றோரை இழந்து ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா ஐந்து இலட்சம் ரூபாய் வைப்பீடு, பட்டப் படிப்பு வரையிலான கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்பது, கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்குதல், உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியாகும் வரை மாதந்தோறும் தலா மூன்றாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்குதல் உள்ளிட்ட தமிழக முதல்வரின் அறிவிப்பை மனமார வரவேற்பதோடு, தமிழக முதல்வரின் நேரடிப்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை வைக்கிறது என தெரிவித்துள்ளார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :