இந்தியாவில் பரவி வரும் கொரோனா வகையை 'கவலையளிக்கும் கொரோனா' வகையாக பட்டியலிட்ட உலக சுகாதார ஸ்தாபனம்!



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
ந்தியாவில் வேகமாகப் பரவி வரும் B.1.617 என்ற உருமாறிய கொரோனா வகையைக் கவலையளிக்கும் கொரோனா வகை என தற்போது உலக சுகாதார ஸ்தாபனம் பட்டியலிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள B.1.617 என்ற கொரோனா வகையும் இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த B.1.617 கொரோனா வகையை இத்தனை காலம் உலக சுகாதார ஸ்தாபனம் 'கவனிக்கப்பட வேண்டிய கொரோனா வகை' என பட்டியலிட்டிருந்தது. இந்நிலையில், இந்த கொரோனா வகை வேகமாகப் பரவுவதை உறுதி செய்யும் வகையில் சில சான்றுகள் இருப்பதால் இதனைக் கவலையளிக்கும் கொரோனா வகை எனப் பட்டியலிடுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்திற்கான தொழில் நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்தார்.

இது குறித்து மரியா வான் கெர்கோவ் கூறுகையில்:-

தற்போதுள்ள தரவுகள் B.1.617 கொரோனா வகை வேகமாகப் பரவுவதைக் காட்டுகின்றது. மேலும் ஒருவரது உடலில் தோன்றும் அன்டிபாடிகளையும் இதை அழிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனாவால் சர்வதேச அளவில் பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, இதனைக் கவலையளிக்கும் கொரோனா வகை என பட்டியலிடுகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே UK, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் B.1.617 வகையைக் கவலையளிக்கும் கொரோனா வகை என்றே குறிப்பிட்டு வருகின்றனர். சீனாவில் 2019 இல் பரவ தொடங்கிய கொரோனாவை விட அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும் கொரோனா வகையை உலக சுகாதார ஸ்தாபனம் கவலையளிக்கும் வகை எனப் பட்டியலிடும். அதேபோல தடுப்பூசிகளில் இருந்து தப்ப வாய்ப்புள்ள கொரோனா வகைகளும் கவலையளிக்கும் கொரோனா எனப் பட்டியலிடப்படும்.

அதேநேரம் இந்தியாவில் தற்போது வேகமாகப் பரவி வரும் B.1.617 கொரோனா வகை தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாது என்பதை உறுதி செய்யும் தரவுகள் எதுவும் இல்லை என்றும் மரியா வான் கெர்கோவ் தெரிவித்தார்.

இதுவரை UK, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவை உலக சுகாதார ஸ்தாபனம் கவலையளிக்கும் கொரோனா வகை என பட்டியலிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :