மு.காவுக்கு துரோகம் இழைத்துவிட்டு மக்கள் காங்கிரஸில் இணைந்தவர்தான் அன்ஸில். அதே செயலை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.



பைஷல் இஸ்மாயில்-
ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸில் பல வருடங்களாக இருந்து கொண்டு அக்கட்சிக்கும், அதன் தலைமைக்கும், அவரை நம்பி வாக்களித்த மக்களுக்கும் மிகப் பெரிய துரோகம் இழைத்து விட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் ஒட்டிக்கொண்டவர்தான் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி பாறூக் சாஹிப் தெரிவித்தார்.

(17) அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அன்ஸில் என்ற நபருக்கு துரோகம் இழைப்பது மிகச் சர்வ சாதாரணமான விடயமாகும். துரோகம் இழைப்பதைப் பற்றி அவருக்கு சொல்லிக் கொடுக்கவே தேவையில்லை. இப்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தலைமைக்கும், அக்கட்சியிலிருப்பவர்களுக்கும் துரோகம் செய்து கொண்டு வருகின்றார்.

அவருடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விழகி வந்தவர்களையும் சேர்த்துக்கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸிக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு 25 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்நிலைமையில் அவர் உள்ளிட்ட 3 பேரும் மேற்கொண்டு வருகின்ற துரோகச் செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரையும், அவருடன் இணைந்து செயற்படுகின்றவர்களையும் அம்பாறை மாவட்ட செயற்குழு வண்மையாக கண்டிக்கிறது. அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்ட செயற்குழு வேண்டுகோள் விடுக்கின்றது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :