கல்முனை கிரீன்பீல்ட் விட்டுத் திட்ட வீதிகள் பூரண காபட் வீதியாக புனரமைப்பு



சர்ஜுன் லாபீர்-
னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கத்திற்கமைய நாட்டில் ஒரு இலட்சம் கிலோ மீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸின் வேண்டுகோள்ளுக்கு அமைய அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்டத்தில் 36 மில்லியன் ரூபாவில் சுமார் 850 மீட்டர் காபட் வீதியாகவும்,750மீட்டர் கொங்கிரீட் வீதியாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இவ் வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (9) கிரீன்பீல்ட் வீட்டுதிட்டத்தில் நடைபெற்றது.

இவ் ஆரம்ப நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரோசன் அக்தார்,ஏ.சி.ஏ சத்தார்,பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்
எம் ஹரீஸின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ பாவா,இணைப்பு செயலாளர் ஏ.எம் சப்றாஸ் நிலாம்,இளைஞர் விவாகாரங்களுக்கான இணைப்பாளர் ஏ.எல் .எம்.ஆசீர் கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் பி. சிவ சுப்ரமணியம்,திட்டப் பொறியியலாளர் எம்.ஐ.எம் ரியாஸ்,தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.ஜாபீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :