நாட்டு மக்களின் உயிர்களை லட்சத்திலும், கோடிகளிலும் கணக்குப்பார்க்கும் நிலையிலேயே இன்றைய அரசாங்கம் உள்ளது.- வேலு குமார்



"நாட்டு மக்களின் உயிர்களை லட்சத்திலும், கோடிகளிலும் கணக்குப்பார்க்கும் நிலையிலேயே இன்றைய அரசாங்கம் உள்ளது." கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார்
நாட்டில் கொவிட் தொற்றின் பாதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. இந்நிலைமைக்கு சரியான நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுக்க அரசாங்கம் தவறியமையே காரணமாகும். விமானநிலையத்தை கட்டுப்பாடின்றி திறந்து வைத்திருந்தமை, உல்லாச பயணிகளை நாட்டுக்குள் வர அனுமதித்தமை. சித்திரை புத்தாண்டில் கட்டுப்பாடுகளை தளரவிட்டமை, தடுப்பூசிகளை ஏற்பாடு செய்யாமை என பல காரணங்களை கூற முடியும்.

இன்றைய நிலைமை மூன்றாவது அலையை தாண்டி, நான்காவது அலை ஏற்படும் என ஊகிக்கப்படுகின்றது. இந்நிலைமையை தடுக்க நாட்டிலுள்ள சுகாதார துறை சார்ந்த பிரதான நான்கு அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருக்கின்றது. நாட்டை குறைந்த பட்சம் 14 நாட்களுக்கு மூடி வைக்குமாறு, மக்கள் நடமாட்டத்தை முழுமையாக அக்காலப்பகுதியில் தடுக்குமாறு, இதுவே சர்வதேச ரீதியான சில ஆய்வுகளின் ஆலோசனையாகவும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதியோ கொவிட் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியோ இதற்க்கு செவிசாய்ப்பதாக இல்லை.

இதற்கு பதிலளிக்கும் வகையில், நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் நாட்டை ஒரு நாளைக்கு மூடி வைத்தால் ரூபா 140 கோடி நாட்டம் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு பார்த்தால் கூட பதின்நான்கு நாட்களுக்கு ரூபா 1960 கோடியே நட்டம் ஏற்படும். அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீனி மோசடியில் மட்டும் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் ரூபா 1950 கோடி என எல்லோருக்கும் தெரியும்.

இன்றைய அரசாங்கம் நாட்டு மக்களின் உயிர்களை லட்சத்தில், கோடிகளில் கணக்குப்பார்க்கும் நிலையிலேயே உள்ளது. நாட்டு மக்களின் உயிர்களை அலட்சியமாக பார்க்கும் அரசாங்கமாக மாறியுள்ளது. லட்சங்கள் கொடிகளை எப்போதும் உழைத்துக்கொள்ள முடியும். மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தை எப்போதும் மேன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் இழந்த உயிர்களை மீள பெற்றுக்கொள்ள முடியாதென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டு மக்களே நாட்டின் பிரதான சொத்து என்பதை புரிந்துகொண்டு ஜனாதிபதியும், கோவிட் தடுப்பிற்கான ஜனாதிபதி செயலணியும் செயற்பட வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :