போகம்பர சிறை கைதிகள் போராட்டத்தை நிறுத்தினர்!



J.f.காமிலா பேகம்-
ண்டி – போகம்பறை சிறைச்சாலையில் 20க்கும் அதிகமான கைதிகள் கட்டட கூரையின் மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் போராட்டத்தை இன்று பகல் கைவிட்டுள்ளனர்.

பி.சி.ஆர் பரிசோதனை தாமதமாகிறது என தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், சிறைச்சாலை ஆணை யாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த சிறைச்சாலை கைதிகள் பழைய போகம் பறை சிறைச்சாலைக்கு அழைத் துவரப்பட்ட பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்துவது வழமையானது. அத்தோடு, 10 ஆம் நாள் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 12 ஆம் திகதி சிறைச்சாலைக்கு வருகை தந்த சிறை கைதிகளே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த சிறைச்சாலை கைதிகளுக்கு எதிர்வரும் 22ஆம் திகதி பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்த நிலையில் போராட்டம் கைவிடபட்டிருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :