சமகால கொரோனா பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பார்வைத்திறனற்ற மற்றும் வலது குறைந்தோருக்கு சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களைத்தேடிச்சென்று ஒரு தொகுதி உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.
மட்டக்களப்பு கல்லடியிலள்ள உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தினருக்கு ஒருதொகுதி உலருணவு நிவாரணங்களை அவர் வழங்கிவைத்தார். லண்டன் வசீகரன் அறக்கட்டளை நிதியம் அதற்கான அனுசரணையை வழங்கிவைத்தது.
அதேபோல் புதுர் மற்று கரடியனாறுபப்pரதேசத்திலுள்ள வலதுகுறைந்தோருக்கும் இத்தகைய உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தார். கனடா அசோகன் தம்பதியின் ஆதிரா பவுண்டேசன் இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தது.
அம்பாறைமாவட்டத்திலிருந்து மட்டக்களப்பிற்கு தேடிவந்து இத்தகையை நெருக்கடியான காலகட்டத்தில் காலத்தில் இத்தகைய உதவியை செய்தமைக்காக தமது நன்றிகளை தெரிவிப்பதாக அவர்கள் கூறினர்.
0 comments :
Post a Comment