கிழக்கில் கொரோனா மரணங்கள் தினம் தினம் அதிகரிப்பு!



இதுவரை 6336தொற்றுக்கள் : 78பேர் மரணம்!
திருமலை1291: அமபாறை 837: மட்டக்களப்பு430:கல்முனை 73
வி.ரி.சகாதேவராஜா-

கிழக்கு மாகாணத்தில் கொரோனா காரணமாக இதுவரை 6336 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனவிற்கு 78பேர் பலியாகியுள்ளனர். கடந்த இருஅலைகளைவிட, இந்த மூன்றாவது அலையில் மரணவிகிதம் படிப்படியாக அதிகரித்துவருகிறது.

இரண்டாம்அலையின்போது மொத்தமாக 25 என்றிருந்த மரணத்தொகை, மூன்றாவது அலையின்போது இரண்டுமடங்கையும் தாண்டி தற்போது 53ஆகி அதிகரித்துள்ளது. அதன்படி மொத்த பலியுயிர் தொகை 78 ஆக உயர்ந்துள்ளது.

மூன்றாவது அலை!
கிழக்கில் மூன்றாவது அலையில் இதுவரை 2631பேருக்கு கொரொனாத்தொற்று ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது அலையில் திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 1291 பேரும், அம்பாறைப்பிராந்தியத்தில் 837 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 430 பேரும் , கல்முனைப்பிராந்தியத்தில் 73 பேரும் தொற்றுகுள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரத்தையும் தாண்டி 1291பேர் கொரோனாத்தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அதன்படி கிழக்கில் திருமலை மாவட்டம் ஆபத்தான நிலையிலிருப்பதை அவதானிக்கக்கூடியதாயுள்ளது.முதலிருஅலைகளின்போது ஆக 864ஆகஇருந்த இவ் எண்ணிக்கை, தற்போது மூன்றாவது அலையுடன் மொத்தமாக 2155ஆக எகிறியுள்ளது.

கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்ட புள்ளவிபரங்களிலிருந்து இதனை அறியமுடிகிறது.

கிழக்கு மாகாணத்தில் மூன்று அலைகளிலும் மொத்தமாக இதுவரை 6336பேர் தொற்றுக்கிலக்காகிய அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் 2155பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தொற்றுக்குள்ளான 6336பேரில் இதுவரை 5471பேர் குணமாகிவீடு திரும்பியுள்ளனர். அதேவேளை 78பேர் மரணிக்க 887பேர் தொற்றிலுள்ளனர்.

கிழக்கில் கொரோனா முதல் அலையில் 23பேரும் இரண்டாவது அலையில் 3673பேரும் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.தற்போது மூன்றாவது அலையில் இதுவரை 2631பேர் இலக்காகியுள்ளனர்.

78பேர் மரணம்!

கிழக்கில் இதுவரை 78பேர் மரணித்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 37பேரும், அம்பாறைப்பிராந்தியத்தில் 09 பேரும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 பேரும், கல்முனைப்பிராந்தியத்தில் 13 பேரும் மரணித்துள்ளனர்.
கிழக்கில் முதலிரு அலைகளில் 25பேர் பலியாகியிருந்தனர். ஆனால் மூன்றாவது அலையில் இதுவரை 53பேர் பலியாகியுள்ளனர் என்னது இவ்வண் ஈண்டுகுறிப்பிடத்தக்கது.

கிழக்கிலுள்ள 10 கொரோனா சிகிச்சைநிலையங்களில் தற்போது 697பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :