கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நோர்வூட் ஆடைத்தொழிற்சாலைக்கு பூட்டு



க.கிஷாந்தன்-
ஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளி ஆடைத்தொழிற்சாலையில் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் ஒன்பது பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதனை தொடர்ந்து காலவரையறையின்றி மூடபட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்ததுள்ளனர்.

குறித்த ஆடைத்தொழிற்சாலை நோர்வூட் பிரதேச சபைத்தலைவரின் ஆலோசனைக்கமைய தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

நோர்வூட் தொழிற்சாலையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஐந்து பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையில் வேலை செய்யும் இருவர் மருந்து எடுப்பதற்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு சென்ற போது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 25 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஆறு பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து 100 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையின் போது 09 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்தே குறித்த ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தொழிற்சாலைகயில் 22 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் (11.05.2021) 260 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதனை தொடர்ந்து குறித்த தொழிற்சாலை தொடர்ந்து மூடுவதா இல்லையா என முடிவு செய்யப்படவுள்ளதாக சுகாதார துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே வேளை அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களுடன் நெருக்கமான உறவை பேணியவர்கள் 200 இற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :