வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை அறுபது (60) பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்றினால் முடக்கப்பட்ட நிலையில் காணப்படும் மருதநகர் கிராமத்தில் தனிப்படுத்தலில் இருந்தவர்கள் மற்றும் மேலெழுவாரியாக இன்று ஞாயிற்றுக்கிழமை முப்பது (30) பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றதுடன், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கியவர்கள் (30) பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளுமாக அறுபது (60) பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
குறித்த பீ.சி.ஆர் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை பரவியுள்ள நிலையிலும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலும் அதிகரித்து காணப்படும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து பிரதேசத்தினை பாதுகாத்துக் கொள்ளுமாறு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment