மக்கள் சேவை மன்றத்தினால் தனிமைப் படுத்தப் பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் திருமலை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு



எம்.ஏ.முகமட்-
திருகோணமலை மாவட்டத்தில் கொவிட் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்குவதற்காக ஒரு தொகை உலர் உணவுப்பொருட்கள் வன்னி ஹோப் அவுஸ்த்திரேலியா நிறுவனத்தின் நிதியுதவியில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவிடம் மாவட்ட செயலகத்தில் (11) வழங்கி வைக்கப்பட்டது.

3000 ரூபா பெறுமதியான 100 உலர்உணவுப்பொதிகள் இதன்போது வழங்கப்பட்டதுடன் உரிய பொருட்கள் உடன் உரிய பிரதேச செயலகங்கள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,உதவி மாவட்ட செயலாளர்(பதில் கடமை) ஜெயகெளரி சிறீபதி, உரிய நிறுவன அதிகாரிகள், மாவட்ட செயலக அரச சார்பற்ற நிறுவன ஒருங்கிணைப்பதிகாரி க.நிர்மலகாந்தன், மாவட்ட செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் திருமதி.சுகந்தினி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :