ரிஷாத் பதியுதீனின் அரசுக்கு எதிரான போக்கும் -நிலை மாற கொள்கையும்!! சிறையில் இருந்தவாரே அரசுக்கு எதிராக வாக்களிப்பு



சப்னி அகமட்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தனது கொள்கையின் நிலையை அடிக்கடி மாற்றிக்கொண்டு செயற்படும் அல்லது டீல் அரசியல் செய்யும் அரசியல்வாதியல்ல என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

தான் சிறையில் இருந்துகொண்டு, டீல் அரசியல் மேற்கொள்ளாமல் தனது அரசுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் மேற்கொண்டே வருகின்றார்.

சிலர் கடந்த தேர்தல்களில் சொன்னார்கள் பசீலுடன் டீலில் உள்ளார் மஹிந்த அணிக்கு எதிராக செயற்படமாட்டார், அவர் அரசை எதிர்க்க மாட்டாரென- ஆனால் டீல் என்று சொன்ன அரசியல்வாதியும் அவர்களின் கூட்டமும் இன்று “abstain”ஆக டீலில் செயற்பட்டதுதான் மிக முக்கிய விடயமாகும்! ஆனால் அது எமக்கு தேவையற்ற விடயம்.
ரிஷாத் பதியுதீன் - எப்போதும் முஸ்லிம் விரோத போக்கை தண்டித்துக்கொண்டிருக்கின்றாரோ- அன்றிலிருந்து இன்று வரை அதே கொள்கைகள் திடமாக உள்ளார் என்பதை இன்றும் அரசுக்கு எதிராக ராஜபக்‌ஷ அணியின், கொழும்பு துறைமுக பொருளாதார நிதிய வாக்கெடுப்பை , நாட்டுக்கு விளைவு ஏற்படக்கூடியவை என்ற நிலைப்பாட்டில் அதற்கு எதிராக சிறையில் இருந்தே வாக்களித்தார்.

கடந்த 52 ஆட்சியில் ரிஷாத் பதியுதீன் என்ற அரசியல் தலைவரின் வகிபாகம் உள்ளிட்ட, அரசியல் மாற்றங்களுக்கு முக்கிய புள்ளியாக செயற்பட்டது அரசியல் அறிவுள்ளவர்களுக்கு நன்கு புரியும், ஆனால் அந்த 52 நாள் ஆட்சி முதல் இன்றுவரை தனதுகொள்கையை மாற்றியமைக்கவில்லை ரிஷாத் பதியுதீன் செயற்படுப்பட்டுவருகின்றார்.

தனது அரசியலை மக்கள் கொள்கையாக முன்னோக்கி நகர்ந்துவரும் ரிஷாட் பதியுதீன், டீல் அரசியல் செய்துகொண்டிருந்தால் - ராஜபக்‌ஷ அரசால் 2 தடவை சிறையில் வாட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

கடந்த 5 மாதங்களுக்கு முன் இதே போன்றுதான் அவர் திட்டமிட்டு சிறையில் அடைக்கப்பட்டு 20 ஆவது அரசியலமைப்பை கொண்டு , அவரின் கட்சியின் 2 பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி 20ஐ வெற்றிகொண்டனர்.அன்றும் அவர் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல் அச்சம் கொள்ளாமல் அரசுக்கு எதிராகவே செயற்பட்டிருந்தார் என்பதுடன் அவர் நினைத்து இருந்தால், கொள்கை தவறி இருந்தால் அரசுக்கு ஆதரவாக இருந்து விடுதலை பெற்றிக்க முடியும் ஆனால் 35 நாட்கள் சிறையில் வாழ்ந்து நீதிமன்றம் ஊடாகவே விடுதலையானார்.

அதே போல் , இன்று சிறையில் இருந்து மிக பெரிய போராட்டத்தின் பின்னர் பாராளுமன்றம் அழைத்துவந்து (இம்முறை பாராளுமன்றம் வராவிட்டு இருந்தால் ஆசனம் கேள்விக்குறியாக இருந்திருக்கும்) தனது கொள்கையில் மாற்றம்கொள்ளாமல் எந்த டீல் அரசியலும் செய்யாமல் தனது நாகரீக அரசியலை மேற்கொண்ட அவரை நினைத்து நாம் பெருமை படுவதுடன் , அவரின் சிறை வாழ்வை நினைத்தால் எமக்கு கண்ணீர் வடிகின்றது!

கொள்கையை மாற்றி டீல் அரசியல் செய்து இந்த சமூகத்தை ஏமாற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ரிஷாத் பதியுதீன் என்ற ஆளுமை அகப்படாமை எமக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. சில முஸ்லிம் அரசியல்வாதிகள்- கொள்கையில் நிலையாக இருக்காமல் நழுவின போக்கை கடைபிடித்தமை இன்றைய abstain வாக்கெடுப்பு அரசியல் மிக சிறப்பாக எடுத்துக்காட்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

PortCity வாக்கெடுப்பில் மக்கள் காங்கிரஸ் எதிர்த்தே வாக்களிக்கும் என இறுதியாக நடைபெற்ற உயர்பீட கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஷாரப், இஷாக் ரஹ்மான் மற்றும் அலி சப்ரி ஆகியோர் முன்னிலையில் தீர்மானம் எடுக்கப்பட்டது உரியமுறையில் அறிவிக்கப்பட்டது. இப்போது வாக்களிப்பில் அரசுக்கு ஆதரவாக இயங்கிய இஷாக், அலி சப்ரி தொடர்பில் கட்சியும், தலைவருமே முடிவெடுப்பார்கள்.

கட்சி தலைமையுடன் கைகோர்த்து, வாக்களித்த மக்களுக்கு மாறு செய்யாத, சுகபோகங்களுக்கு விலைபோகாத பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபினுக்கு இளைஞர்கள் சார்பாக விஷேட நன்றிகளை சொல்லிக்கொள்கின்றோம்.

தன் மக்களுக்காக சிறையில் வாழ்ந்தாலும் பரவாயில்லை- என்ற தைரியமுக் மன நம்பிக்கையும் அவரை பெற்றபெறச்செய்யும்!!



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :