நாவிதன்வெளி தமிழ் மக்களின் நீண்ட நாள் தேவை றிஸ்லி முஸ்தபாவினால் நிறைவேற்றம்!



நாட்டின் ஒரு லட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசம் மொத்தமாக 6 கிலோமீற்றர் கொங்ரீட் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

றிஸ்லி முஸ்தபாவின் முயற்சியினால் கொண்டு வரப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் புனரமைப்பு வேலைகளை
(24) திங்கட்கிழமை காலை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை தொகுதி செயற்பாட்டாளரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளருமான றிஸ்லி முஸ்தபா மற்றும் தவிசாளர் ஏ. அனந்தன் ஆகியோர் பார்வையிட்டனர்.
என்.எஸ் என்ஜினீரிங் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் றிஸ்லி முஸ்தபாவின் இணைப்பாளர்களான எம்.யூ.எம். நியாஸ், ஷாதீக், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.சதீஷ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :