வாடகைக்கு சிந்திக்காமல் சுயமாக சிந்திபீர்களா ? தலைவரை துரோகி என்று கூறுவீர்களா ?



சில தினங்களுக்கு முன்பு “கொழும்பு துறைமுக நகர் விவகாரமானது முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினையல்ல. இதை அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று பதிவிட்டிருந்தேன்.

இதனுள் புதைந்துள்ள ஆழமான விடயங்களை பற்றி அலசி ஆராயாமல், நுனிப்புல் மேய்கின்ற சில குறை குடங்கள் எனது கருத்தை விமர்சித்திருந்தனர்.

அதாவது நான் நாட்டின் துரோகி போன்று தங்களது முகநூலில் எனது கருத்தினை பதிவிட்டு கலாய்த்திருந்தனர்.

தலைவர் ரவுப் ஹக்கீமின் சகோதரர் உட்பட பொறுப்புள்ள இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று இருபதுக்கு கை உயர்த்தியவர்கள் என்னை இயக்குவது போன்று தங்கள் கற்பனைகளை பதிவிட்டிருந்தனர்.

அதாவது துறைமுக நகரை எதிர்ப்பவர்கள் மாத்திரமே இந்த நாட்டின் விசுவாசிகள் என்றும், எதிர்க்காதவர்கள் அல்லது அலட்டிக்கொள்ளாதவர்கள் அனைவரும் நாட்டுக்கு துரோகம் செய்பவர்கள் என்றும் பதிவிட்டிருந்தனர்.

இப்போது எனது கேள்வி ?

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் துறைமுக நகர் விவகார வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அதாவது அலட்டிக்கொள்ளவில்லை.

இப்போது நீங்கள் என்ன கூறப்போகின்றீர்கள் ? தலைவர் ரவுப் ஹக்கீமை இந்த நாட்டின் துரோகி என்று கூறுவீர்களா ? கூறமாட்டீர்கள்.

ஏனெனில் உங்களுக்குத்தான் சுயமாக சிந்திக்க தெரியாதே ! வாடகைக்கு சிந்திக்கின்ற உங்களிடம் எப்படி உண்மையையும், நீதியையும் எதிர்பார்ப்பது.

இனிமேலாவது அரசியல்வாதிக்காக அல்லாமல் சமூகத்துக்காக சிந்திப்போம்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :