பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் கொரோனா பேரிடர் மீட்பு குழு மீளாய்வு கூட்டம்



சென்னை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கொரோனா பேரிடர் மீட்பு குழு மீளாய்வு கூட்டம், மே 15 அன்று சென்னை மண்ணடியில் அமைக்கப்பட்டுள்ள வார் ரூமில் மாநில ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ரபீக் ராஜா தலைமையில் நடைபெற்றது. காணொளி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பி.எஃப்.ஐ தமிழக தலைவர் முஹம்மது சேக் அன்சாரி கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

இது குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ரபிக் ராஜா கூறுகையில், தமிழகத்தில் தற்பொழுது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொள்ளும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மாநில அளவில் கொரோனா பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறோம். இதன் மூலம் கொரோனா தடுப்பு மற்றும் சேவை பணிகள் தமிழகம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கொரோனா பேரிடர் மீட்பு பணிகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவபொருட்கள், மருத்துவ படுக்கை பற்றாக்குறை உணவுப் பொருள்கள் வழங்குதல் , மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் , இறந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தல் போன்ற பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் வேகமாக செய்து வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

மாவட்ட பொறுப்புதாரிகள் உடன் நாங்கள் காணொளி வாயிலாக நடத்திய மீளாய்வு கூட்டத்தில் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி கலந்து கொண்டு முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்தும், மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்தும், இயக்க தன்னார்வலர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
மேலும் அடக்கம் செய்கின்ற பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு போதுமான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விட்டமின் மருந்துகள் இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே தமிழக அரசு தன்னார்வ களப்பணியாளர்களுக்கு போதுமான மருத்துவ ரீதியிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :