போதைக்குள் சிக்கப்போகும் எம்பிரதேசம்!!!-முஹமட் றம்ஸான்





அன்பான உறவுகளே !!!
மது பிரதேசத்தில் அண்மைகாலமாக போதைப்பொருள் பாவனை மிகவும் வேகமாக அதிகரித்து வருவது ஒரு அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

இது எதிர்கால சந்ததியின் வாழ்க்கையை சீர் குலைப்பதுடன், உயிரையே காவு கொள்ளும் பேராபத்தையும் கொண்டது.

முன்பொரு காலத்தில் இந்த போதைப்பொருள் இலங்கையின் மேல் மாகாணங்களில் காணப்பட்டதுடன், பாவனையிலும் இருந்ததை நாம் வானொலி, தொலைக்காட்சி மூலம் தெரிந்து இருந்தோம். ஆனால்,

இன்று நிலைமை தலைகீழாக மாறி எமது பிரதேசத்தில் ஊடுருவி, வேகமாக பரவி உள்ளது மிகவும் ஒரு துரதிஷ்டமான கவலையான விடயமாகும்.

பாடசாலை மாணவர்கள் தொடக்கம் வாலிபர்கள், வயதானவர்கள் வரை இது அகலப் பரந்து இருக்கிறது. ஐஸ், மாவா, கொகைன், டெப்லட், இன்சுலின், சுவீட்பாக்கு, புகையிலை என்று பல வகையான வித்தியாசமான தோற்றத்திலும் அமைப்பிலும் காணப்படும் இவ்வகையான போதைப்பொருட்கள் பெரும் ஆபத்தானவை கொடூரமானவை. வாய்ப்புற்றுநோய், புற்று நோய், மன நோய், மூளைக்கட்டி,இருதய நோய், ரத்த அழுத்தம், பிரம்மை போன்ற பல வியாதிகளையும் இது தோற்றுவிப்பதுடன் கொலை, கொள்ளை, விபச்சாரம் போன்ற பாரிய ஆபத்துக்களையும் ஏற்படுத்தி வாழ்க்கையை சுக்குநூறாக்கி அகலபாதாளத்திலும் தள்ளி விடுகின்றது.
உங்கள் பிள்ளைகள் உதடு, முரசு,பற்கள் கீழே டெப்ளட்ஸ், தூள், பாக்கு போன்ற பதார்த்தங்களை வைப்பதை காண்கிறீர்களா?
அல்லது சட்டைப்பையில் சிறிய மாவு போன்ற பதார்த்தம், பொட்டலம், அலுமினிய பேப்பர்,வார்னிஸ் பேப்பர் போன்றவற்றை காண்கிறீர்களா? உடனடியாக விழித்துக்கொள்ளுங்கள் உடனடியாக அவர்களின் வாய் மற்றும் கை விரலை முகர்ந்து பார்ப்பதுடன், கண்களையும் அவதானியுங்கள் பிற்பாடு நீங்களே அறிந்து கொள்வீர்கள்.
கேட்டால் அது சும்மா பேப்பர்தான், தலைவலி மாத்திரைதான் என்று சொல்வார்கள் ஏமாந்து விடாதீர்கள்.
உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில் எனவே இன்றே நாம் இந்த பேராபத்திலிருந்து எமது இளைஞர்களை மீட்டெடுக்க திடசங்கற்பம் கொண்டு நல்ல வளமான, ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை உருவாக்க ஒற்றுமையுடன் கைகோர்த்து எமது பிரதேசத்திலிருந்து இந்த போதைப்பொருள்,ஐஸ்,குடு பாவனையை அடியோடு அழிக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :