கொரோனா அச்சுறுத்தலிலிருந்து விடுபடுவதற்கு பிரார்த்திப்போம் டவர் நிதிய பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாஷிம் உமர்



கொரோனா அச்சம் தொடர்ந்தும் காணப்படுவதால் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு சகலரும் இப்பெருநாள் தினத்தை தத்தமது வீடுகளில் இருந்தவாறு கொண்டாடி மகிழ்வோம் என டவர் நிதிய பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாஷிம் உமர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,புனித ரமழான் மாதத்தில் இறையச்சத்துடன் நோன்பு நோற்று, ஆன்மீக மேம்பாட்டுக்காக வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டு இன்று பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் உவகையடைகின்றேன்.

கொரோனா மூன்றாவது அலை முழு உலகையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்டுள்ள நிலையில் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கும் சகலரும் இத் தினத்தில் பிரார்த்திக்க வேண்டும்.

கொரோனாவைக் கட்டுப்படுத்தி நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு அரசாங்கமும், சுகாதாரத்துறையினரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். அதற்கு சகல தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதேபோன்று பல்வேறு வழிகளிலும் இன்று முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிப்பதற்கு சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :