பூத்துக் குலுங்கும் புத்தளத்தை பார்க்க முயன்ற தலைவர். மர்ஹூம் பாயிஸ் அவர்களின் மறைவு ஆழ்ந்த துயரளிக்கிறது.-காதர் மஸ்தான் MP



புத்தளம் நகர முதல்வரும் முன்னாள் பிரதியமைச்சருமான மர்ஹூம் அல்ஹாஜ் கே.ஏ.பாயிஸ் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையுமுற்றேன்.

பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் அரசியல் பாசறையில் பயில்பெற்ற இளம் தலைவரான பாயிஸ் இளம் வயதிலேயே புத்தளம் நகர சபையின் தலைவராக 1997 ஆம் ஆண்டு முதல் பல தடவைகள் பதவி வகித்து வந்துள்ளார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் பதவிகள் வகித்ததுடன் எல்லா நிலமைமைகளிலும் மக்களின் துயரறிந்து உயரிய சேவைகளை ஆற்றியுள்ளார்.
புத்தளம் மண்ணோடும் மண்ணின் மக்களோடும் இரண்டறக் கலந்து உயர் பணிகள் பல ஆற்றிய அன்னாரின் பிரிவுச் செய்தி எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் நண்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கே. காதர் மஸ்தான்
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்
மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :