03 மாதங்களுக்கு மட்டுமே இறக்குமதி செய்ய இலங்கைக்கு முடியும்- பேராசிரியர் சந்திரநாத் அமரசேகர



J.f.காமிலா பேகம்-
லங்கை மத்திய வங்கியில் அந்நிய செலாவணி 4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த தொகையை வைத்து இன்றும் 04 மாதங்களுக்கே இறக்குமதிகளை செய்ய முடியும் என்று மத்திய வங்கியின் அதிகாரிகள் அரசாங்கத்திடம் தெரிவித்திருக்கின்றனர்.

சீன மத்திய வங்கி 1.5 பில்லியன் டொலர்களை வெளிநாட்டு கொடுக்கல் வாங்கலாக மாற்றிக் கொள்ள முடியும் என்ற போதிலும் அந்த தொகையை வைத்து ஒரு மாதத்திற்குத் தேவையான இறக்குமதிகளை செய்ய முடியும் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சந்திரனாத் அமரசேகர தெரிவிக்கின்றார்.

இதுதவிர, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலிருந்து வெளிநாட்டு செலாவணியை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 780 மில்லியன் டொலர்கள் கிடைக்கவிருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :