பட்டினிநிலைமைக்குச் சென்ற 100குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவி!



வி.ரி.சகாதேவராஜா-
மகால கொரோனா பயணத்தடை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பட்டினி நிலைமைக்குச்சென்ற மக்களுக்கு சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஒரு தொகுதி உலருணவுப் பொதிகளை நேற்று வழங்கிவைத்தார்.

ஆலையடிவேம்பு மற்றும் தம்பிலுவில் பிரதேசங ;களில் நலிவுற்ற 100 குடும்பங்களுக்கு ஒருதொகுதி உலருணவு நிவாரணங்களை சுகாதாரநெறிமுறைக்கிணங்க அவர் வழங்கிவைத்தார்.

பயணத்தடையால் நாளாந்த கூலித்தொழிலை இழந்து வாழ்வாதாரத்தை பூரணமாக இழந்து உண்பதற்கு எதுவுமே இல்லாத நிலையிலிருந்த இவர்களை இனங்கண்டு வழங்குவதற்கு அவ்வூர் பிரமுகர்கள் உதவியிருந்தனர்.

அதேபோல் அப் பிரதேசங்களிலுள்ள வலதுகுறைந்தோருக்கும் இத்தகைய உலருணவுப்பொதிகளை தவிசாளர் ஜெயசிறில் தனது உறவுகளின் பங்களிப்புடன் வழங்கிவைத்தார்.

அம்பாறைமாவட்டத்தில் காரைதீவிலிருந்து தேடிவந்து இத்தகையை நெருக்கடியான காலகட்டத்தில் காலத்தில் இத்தகைய உதவியை செய்தமைக்காக தமது நன்றிகளை தெரிவிப்பதாக மக்கள் கூறினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :