இலங்கையில் சூரியக் கல மின்சக்தி திட்டங்களுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி



அரசாங்க தகவல் திணைக்களம்-
ண்மையில் நடைபெற்றுமுடிந்த இலங்கை முதலீட்டு பேரவை மாநாட்டின் அமர்வொன்றில் கலந்துகொண்டிருந்த அதி மேதகு ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷ அவர்கள் தனது உரையின்போது, 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தேசிய மின்சக்தி தேவையில் 70 வீதத்தை புதுப்பிக்கதக்க சக்தி மூலமாக பூர்த்திசெய்து கொள்ளவேண்டுமென்ற உறுதிப்பாட்டினை வலியுறுத்தியிருந்த நிலையில் அவரது இலக்கினை வெற்றிகொள்வதற்காக இலங்கையுடன் பங்காளியாக இணைந்து கொள்ளும் முதலாவது நாடாக இந்தியா உள்ளது.

2. இந்த அடிப்படையில் சூரியக்கல மின்சக்தி துறையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதற்காக நூறு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் வசதிகளை வழங்குவதற்கான உடன்படிக்கை ஒன்று இன்றைய தினம் ஜனாதிபதி அதி மேதகு கோதாபய ராஜபக்‌ஷ அவர்களின் முன்னிலையில் இலங்கை அரசாங்கம் மற்றும் இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆகிய தரப்புக்களால் கைச்சாத்திடப்பட்டதுடன் இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே மற்றும் திறைசேரி செயலர் திரு. எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரால் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

3. 2018 மார்ச் மாதம் நடத்தப்பட்டிருந்த சர்வதேச சூரியக்கல கூட்டமைப்பின் மாநாட்டின்போது அறிவிக்கப்பட்டிருந்த திட்டங்களான வீடுகளினதும் அரச கட்டடங்களினதும் கூரைகளில் சூரியக்கலங்களை பொருத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இலங்கையில் முன்னெடுப்பதற்கு இந்த 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் ஆதரவினை வழங்கும்.

4. தொழில்நுட்பம், நிதி மற்றும் மூலதனம் ஆகிய துறைகளில் தொடர்புடைய சவால்களை எதிர்கொள்வதற்காகவும் சூரியகல மின்சக்தி துறையில் பாரிய அபிவிருத்தியினை முன்னெடுப்பதற்காகவும் சகல நாடுகளையும் ஒன்றிணைப்பதற்காக இந்த சர்வதேச சூரியக்கல கூட்டணியானது இந்திய பிரதமர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி ஆகியோரால் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன் இலங்கை உட்பட 89 நாடுகள் இந்த சர்வதேச சூரியக்கல கூட்டமைப்பின் கட்டமைப்பு குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

5. சூரியகல மின்சக்தி துறை தொடர்பாக இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களால் முன்வைக்கப்பட்டிருந்த தேசிய இலக்குகளின் ஒத்த தன்மை தொடர்பாக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அவர்களும் உயர் ஸ்தானிகர் அவர்களும் கருத்துக்களை பரிமாறியுள்ளனர். 2014 மார்ச் மாதமளவில் 2.6 GW அளவில் பதிவாகியிருந்த சூரியக் கலங்கள் மூலமான மின் உற்பத்தியானது கடந்த 7 ஆண்டுகளில் கணிசமான முன்னேற்றத்தை கண்டதுடன் 2021 ஆம் ஆண்டு 34.6 GW இலக்கை எட்டியது. இந்தியாவின் தேசிய சூரியக்கல கட்டமைப்பு இந்த இலக்கினை 100 GW ஆகவோ அல்லது அதற்கு அப்பால் அதிகரிப்பதனையோ இலக்காகக் கொண்டுள்ளது.

6. புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் எமது இருநாடுகள் இடையிலும் காணப்படுகின்ற பொதுவான இலக்கானது எமது பொதுவான தேசிய தேவைகள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான ஒன்றிணைந்த அணுகுமுறைகள் ஆகியவற்றினை பிரதிபலிப்பதாக அமைகின்றது. இந்த முக்கியமான துறையில் ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்துவதன் ஊடாக எமது ஒட்டுமொத்த சக்தித் துறை சார்ந்த பங்குடமையை மேம்படுத்துவதற்கு உதவும் அதேவேளை காலநிலை மாற்றத்தின் விளைவுகளை முறியடிப்பதற்கும் வெளியேற்றங்களை குறைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் எமது உலகளாவிய முயற்சிகளுக்கு பங்களிப்பினை வழங்குவதாகவும் அமைகின்றது.

கொழும்பு
16 ஜூன் 2021

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :