காரைதீவு பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொண்ட 102 பேருக்கான அண்டிஜென் பரிசோதனை : 14 பேர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர்.



மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர்-
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் திங்கட்கிழமை (31) எழுமாறாக மேற்கொண்ட 102 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் 14 நபர்கள் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக் கிணங்க காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், குடும்ப நல உத்தியோகத்தர், நுளம்பு தடுப்பு பிரிவினர்கள் ஆகியோர் இணைந்து காரைதீவு, மாவடிப்பள்ளி பிரதேசத்தில் உள்ள மைதானங்கள், பொது இடங்கள் மட்டும் வீதியில் உலாவித் திரிந்தோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோர், சுகாதார நடைமுறைகளைப் பேனாதோர், பொலிஸார் என பலருக்கும் மேற்கொண்ட (102 பேருக்கான) அண்டிஜென் பரிசோதனையில் 14 நபருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதானது பிராந்திய மக்களுக்கு மிகமுக்கியமான செய்தியை எத்திவைத்துள்ளது.

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றின் பாதிப்பு கிழக்கிலும் அதிகமாக உள்ளதனால் சுகாதார வழிமுறைகளை சரியாக பின்பற்றி சுகாதார தரப்பினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் முழு ஒத்துழைப்பினை வழங்குவதன் மூலம் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :