இலங்கை அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை குழுவின் அனுமதியின் அடிப்படையில் கல்வியமைச்சின் செயலாளரினால் உடன் செயற்படும் வண்ணம் அதிபர் வெற்றிடம் நிலவிய 113 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இசுருபாயவில் நேற்றுமுன்தினம்(8) நடைபெற்ற அவசரகூட்டத்தில்வைத்து, கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி பெரேரா நியமனக்கடிதங்களை 113புதிய அதிபர்களுக்கு வழங்கிவைத்தார்.
திங்களன்று இசுருபாயவிலிருந்து கல்வியமைச்சுக்கு நாளை வருமாறு அவசர தகவல் தொலைபேசி வாட்ஸ்அப் மூலமாக குறித்த அதிபர்களுக்கு அழைப்புவந்தது. பயணத்தடை காலமென்பதால் இவர்கள் அந்தந்தப்பிரதேசங்களில் அன்ரிஜன்சோதனை செய்து பின்னர் பிரதேசசெயலாளர் அரசஅதிபரின் வழிப்பணயத்திற்கான அனுமதி(பாஸ்)யைப் பெற்று இரவோடிரவாக கொழும்பு சென்றனர்.
அங்கு செவ்வாயக்கிழமை(8) காலைமுதல் கொரோனா சுகாதாரநடைமுறைக்கமைவாக 25, 25 பேராக அழைத்து அமர்வுகளை நடாத்தி நியமனக்கடிதங்களை வழங்கிவைத்தார்கள். அரைமணிநேரத்துக்கும் குறைவாக கூட்டங்கள் நடாத்தி நியமனக்கடிதங்கள் கையளிக்கப்பட்டன.
கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி பெரேரா மேலதிக செயலாளர் டபிள்யு எம்.புஸ்பகுமார ஆகியோர் சமுகமளித்து சிங்களத்தில் கனிவாகப்பேசி கடிதங்களை வழங்கிவைத்தனர்.
இலங்கை அதிபர் சேவை தரம் 1ஜச்சேர்ந்தவர்களுக்கும் இ.க.நி.சேவையைச்சேர்ந்தவர்களுக்கும் என வேறுவேறு தேசியபாடசாலைகளுக்கு விண்ணப்பம்கோரப்பட்டிருந்தது.
இவர்களுக்கான நேர்முகப்பரீட்சை கடந்த பெப்ருவரி மாதத்தில் இசுருபாயவில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment